கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிப்காட் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மேம்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் இந்நிலையில், 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் மாணவர்களும், பணிக்கு செல்வோரும் அவதிக்குள்ளாகினர்.