நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேரில் பார்த்து ரசித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னணி வீரர் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் இடையே நடைபெற்ற போட்டியை தோனி பார்த்து ரசித்தார். இதில் ஜோகோவிச் வெற்றிப் பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளார். அரையிறுதில் அல்காரஸ் – ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.