சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி 7வது முறையாக மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
NIRF எனப்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு, ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
பொறியியல், மருத்துவம், சட்டம், கட்டிடக்கலை, வேளாண்மை உள்ளிட்ட 17 பிரிவுகளில் தரவரிசை பட்டியல்கள் வெளியிடப்படுகின்றன.
அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்திருக்கிறது.
பெங்களூரு IIS, மும்பை ஐஐடி நிறுவனங்கள் 2 மற்றும் 3வது இடங்களை பிடித்துள்ளன.
இதேபோல் டெல்லி ஐஐடி 4வது இடமும், கான்பூர் ஐஐடி 5வது இடமும் பிடித்துள்ளன.
டெல்லி எய்ம்ஸ் நிறுவனம் 8வது இடத்தையும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் 9வது இடத்தையும் பிடித்துள்ளன.