கோவை மாவட்டம் அரசூரில் ஓணம் பண்டிகையையொட்டி கல்லூரி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசூரில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கேரள பாரம்பரிய உடைகளை அணிந்து பங்கேற்ற மாணவிகள், அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்னர் வேடமிட்டவர்களை வரவேற்றனர்.
இந்த கொண்டாட்டத்தை காண வெளிநாட்டினரும் வருகை தந்திருந்தனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் செண்டை மேளம் இசைக்க மாணவ, மாணவிகள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.