மத்திய அரசின் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையால் இலங்கை தமிழ் சொந்தங்கள் இனி சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது, என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உள்நாட்டு போர் காரணமாக நீண்ட காலமாக நமது நாட்டில் தங்கியிருக்கும் இலங்கை தமிழ் சகோதரர்கள் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்ததாக கூறினார்.
இதனை பரிசீலித்த மத்திய அரசு, 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்பு இந்தியா வந்து அகதிகளாக பதிவு செய்த இலங்கை தமிழர்கள், சட்டபூர்வமாக தங்க அனுமதி அளித்தது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டார்.
இதற்காக தமிழக மக்கள் சார்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அவர் தெரிவித்தார்.