அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் - நயினார் நாகேந்திரன் உறுதி!
Sep 5, 2025, 09:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

Web Desk by Web Desk
Sep 5, 2025, 07:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, திமுக கொடுத்த வாக்குறுதியின் படி தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 14 நாட்கள் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களைக் கொஞ்சம் கூட மனிதத் தன்மையின்றி தாக்கி அவர்களைத் தடாலடியாக அப்புறப்படுத்தியது ஆளும் அறிவாலய
அரசு என தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களுக்குத் துணை நின்றவர்களையும் ஏவல்துறை அடித்துத் துன்புறுத்தியதைத் தமிழகம் இன்னும் மறக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராது தங்களுடைய வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தை மீண்டும் அறவழியில் தொடர்வது குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை சிந்தாதிரிப்பேட்டை உழைப்பாளர் தினப் பூங்காவில் கூடிய தூய்மைப் பணியாளர்களின் மீது திமுக அரசு மீண்டும் அடக்குமுறையை ஏவி அவர்களைக் கைது செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அங்கே செய்தி சேகரிக்கச் சென்ற ஊடக நண்பர்களையும் சட்டத்திற்குப் புறம்பாக தரக்குறைவாக நடத்தியதோடு, இதுகுறித்து புகார் அளிக்கச் சென்றதால் கைது செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளது.

ஆளும் அரசின் இந்த அதிகாரத் துஷ்பிரயோகத்தை  வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்களுக்கு எதிராக எழும் போராட்டக் குரல்களைக் கண்டு திமுக அரசுக்கு அத்தனை பயமிருந்தால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டுப் போக வேண்டியது தானே?

அதைவிட்டு விட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்குவதற்கு அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இதுதான் திமுகவின் சமூகநீதியின் லட்சணமா? ஆளும் அரசு தனது அராஜகப் போக்கால் அழிவை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது! அனைத்திற்கும் கூடிய விரைவில் முடிவு கட்டப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: DMK governmentTamil Nadu BJP state president Nainar NagendranSanitation workers protestsanitation workers attacked
ShareTweetSendShare
Previous Post

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்க மத்திய அரசு அனுமதி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்பு!

Next Post

கூட்டணி தொடர்பான முடிவை டிடிவி தினகரன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அண்ணாமலை வேண்டுகோள்!

Related News

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற டார்ஜிலங் பக்தர்கள் – அண்ணாமலையாரை தரிசித்து பக்தி பரவசம்!

மேற்குவங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் அமளி – பாஜக கொறடா மீது அவை காவலர்கள் தாக்குதல்!

கூட்டணி தொடர்பான முடிவை டிடிவி தினகரன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அண்ணாமலை வேண்டுகோள்!

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்க மத்திய அரசு அனுமதி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்பு!

ஜிஎஸ்டி வரி சலுகைகளை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வேண்டும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு – அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட் அமல்படுத்த உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் – மத்திய அரசு அனுமதி!

ஓணம் பண்டிகை – கேரளா செல்லும் பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்!

கோவை அரசூர் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன் அளிக்கும் – பிரதமர் மோடி

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

நாடெங்கும் கரைபுரளும் உற்சாகம் : தீபாவளி பரிசாக GST குறைப்பு – யாருக்கு என்ன பலன்?

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies