ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்பதாக, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானை திருப்திப்படுத்துவதற்காக அமெரிக்கா 50 சதவீத வரியை இந்தியா மீது விதித்துள்ளதாக தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி சீர்திருத்ததை வரவேற்பதாக தெரிவித்த அவர், இதன் மூலம் பொருள்களின் விலை குறையும் என கூறினார்.
பொருள்கள் விலை குறைந்தால் பொதுமக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து நாட்டின் பொருளதாகரம் வலுப்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
வரி சரியான விகிததத்தில் இருந்தால் அதிகம் பேர் வரி கட்டுவார்கள் என்றும், இல்லையெனில் ஆடிட்டர் மூலம் அதனை சமாளிக்க முயல்வார்கள் என்றும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டார்.