விருத்தாச்சலத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பட்டா கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிக்குப்பம் கிராமத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஆய்வு செய்ய வந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனைப் பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
அப்போது தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டா திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பறிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினர்.