திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ரீல்ஸ் மோகத்தால் அட்ராசிட்டியில் ஈடுபடும் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்குவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அட்ராசிட்டியில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் மண்ணச்சநல்லூரில் இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை இயக்கி பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார்.
இதேபோல் அந்த இளைஞர் அரசு பேருந்தை மறித்து அதன் முன், தண்டால் எடுத்து அட்ராசிட்டியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.