கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரால், சாலையில் சென்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நட்டாலம் பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் மூதாட்டி ஒருவர் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர், மூதாட்டி மீது அதிவேகமாக மோதியுள்ளார்.
இதில் மூதாட்டியின் கால் துண்டான நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.