ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜா சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்லைனில் பட்டாசுகள் விற்கப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.