அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஐந்து முறைச் சாம்பியனான சென்னை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.
இதனால் ஐபிஎல்லில் சிஎஸ்கே தோல்வியைத் தழுவியதுடன், புள்ளிப் பட்டியலில் முதன் முறையாகக் கடைசி இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில் தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. அப்போது இதற்குப் பதிலளித்த தோனி, தான் ஓய்வு பெற இன்னும் நிறைய காலம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.