ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம், சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் மலையாள மக்கள் குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். பாரம்பரிய உடையணிந்து வந்த மக்கள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர், கோயில் கொடிக்கம்பத்தின் கீழே போடப்பட்டிருந்த அத்திப்பூ கோலம் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோன்று, சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் நடிகர்த் திலீப் உட்பட ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல, மாவட்டத்தில் உள்ள தர்ம சாஸ்தா கோயில், திக்குறிச்சி மஹா தேவர் கோயிலும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.