ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அந்நாட்டில் உள்ள வணிக வளாகத்தில் செண்டை மேளம் முழங்க பெண்கள் நடனமாடியது பார்வையாளர்களை கவர்ந்தது. அப்போது மகாபலி சக்கரவர்த்தி போல வேடமணிந்த நபர் வனிக வளாகத்தை வலம் வந்தார்.
ஓணத்தை ஒட்டி வணிக வளாகம் முழுவதும் கேரளாவில் கிடைக்கக்கூடிய பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.