மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது மக்களுக்கான தீபாவளி பரிசு என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் விலகலால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த இழப்பும் இல்லையென தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிப்படி பகுதிநேர ஆசிரியர்களை திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.