கட்டா குஸ்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தை விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.
மேலும், முனீஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கான அறிவிப்பைச் சமீபத்தில் நகைச்சுவையாக விஷ்ணு விஷால் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் பூஜை வீடியோ வெளியாகியுள்ளது.