நாமகிரிப்பேட்டையில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில், மானிய திட்டத்தில் நிலக்கடலை விதை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக, நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, மானிய திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்க இருந்த நிலக்கடலை விதையை உதவி இயக்குநர் வெளிச்சந்தையில் விற்பனை செய்ததாக குற்றம்சாட்டினார்.
வேளாண் உதவி இயக்குநர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி ஜூலை 25ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாகவும் கூறினார்.
தற்போது, உதவி இயக்குநரின் கணவர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறிய அவர், மானிய விலையில் நிலக்கடலை விதை கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.