சென்னை அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட ஒருவர் புகாரளிக்க வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்று, பின்னர் மனு அளிக்க வருமாறு காவலர்கள் அந்த நபரிடம் தெரிவித்தனர். இருப்பினும் அவர் அங்கிருந்து செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் காவலர்கள் அந்த நபரை காவல் நிலையத்தில் இருந்து விரட்டினர். குடும்பத் தகராறில் மனைவி அடித்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.