சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் பணிக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 120 வீரர்கள், 34 வீராங்கனைகளின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
லெப்டினன்ட் ஜெனரல் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், ராணுவ வீரர்களின் இருசக்கர வாகன அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்வு நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் நடத்திய தற்காப்பு கலை மற்றும் குதிரைச் சவாரி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதனையடுத்து ராணுவ வீரர்கள் களரி பயிற்சியில் ஈடுபட்டும், நடனமாடியும் அசத்தினர். பங்கர் வெடிக்கும் நிகழ்வுடன் சாகசத்தை நிறைவு செய்த வீரர்கள் அனைவருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.