அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்தை வரவேற்பதகாவும், கட்சி ஒன்றுபடுவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் சசிகலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக எந்த சக்தியாலும் அழிக்க முடியாத பேரியக்கம் என்பதையும், தனது உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்தான் என்பதையும் செங்கோட்டையன் நிரூபித்துக் காண்பித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
கட்சி ஒன்றுபட வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துதான் அதிமுகத் தொண்டர்கள் மற்றும் மக்களின் கருத்தாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள சசிகலா அதிமுகவில் உண்மை தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீய சக்தியின் எண்ணம் எப்போதும் ஈடேறாது எனக் கூறியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவது உறுதி எனவும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுக வழிவகை செய்யும் எனவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.