விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லத்தில், அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மகளிர் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது கட்சியின் வளர்ச்சி பணிகள், 2026 தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது சனிக்கிழமையன்று அன்புமணி தரப்பில் நடைபெறும் கூட்டத்தில், மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸூம், அன்புமணியும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருவது அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.