பிரான்சின் ஹாட்ஸ்-ஆல்ப்ஸ் பகுதியில் பலத்த ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் கேப் பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் பனிக்கட்டி படர்ந்ததுடன், குளிர்ந்த நீர் சாலைகளில் பரவி ஓடியது.
இது மேலும் மோசமான சூழலை உருவாக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.