பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவருக்கு மும்பை போலீசார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், தொழிலதிபர் ஒருவரிடம் சுமார் 60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தொழிலை விரிவுபடுத்துவதாக கூறி, 2015 முதல் 2023 வரை, தன்னிடமிருந்து 60 கோடியை ஷில்பா வாங்கியதாகவும், அதைத் தனிப்பட்ட செலவுகளுக்குச் செலவிட்டதாகவும் தொழிலதிபர் தீபக் கோத்தாரி குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக இருவருக்கு எதிராகவும் மும்பை காவல்துறை லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.