உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி அமைச்சர்களையே நம்ப வைத்த மோசடி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுர திரிபாதி என்பவர் பல ஆண்டுகளாக தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி ஊரை ஏமாற்றி வாழ்ந்து வந்துள்ளார்.
உத்தரப்பிரதேச அமைச்சரவையின் சிறப்புச் செயலாளர் எனக் கூறி அரசு நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டுள்ளார்.
சொகுசு கார்களில் வலம் வந்தததுடன் துப்பாக்கி ஏந்திய மெய்க்காப்பாளர்களை நியமித்து அனைவரையும் திறமையாக நம்ப வைத்துள்ளார்.