இந்தியாவை அச்சுறுத்தும் விதமான கருத்துக்களை பகிர்ந்த ஆஸ்திரிய பொருளாதார நிபுணர் குண்ட்டர் ஃபெலிங்கரின் எக்ஸ் தள கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இவர் இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் தவறான அவதூறான கருத்துகளை பகிர்ந்து வந்தார்.
இதனை கண்டறிந்த மத்திய உள்துறை அமைச்சகம், அந்தக் கணக்கை முடக்குமாறு எக்ஸ் தளத்திற்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து குண்ட்டர் ஃபெலிங்கரின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது.