இந்தியா மற்றும் ரஷ்யாவை சீனாவிடம் இழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவு சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்ததால் இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்துச் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சீன மற்றும் ரஷிய அதிபர்களுடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், 3 தலைவர்களும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை Truth Social தளத்தில் பகிர்ந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில், இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்து விட்டதாகவும், நீண்டகால மற்றும் வளமான எதிர்காலத்தை 3 நாடுகளும் கொண்டிருக்கட்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.