கோவையில் உலா வரும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன.
தொண்டாமுத்தூரில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வந்தனர்.
இதைஅடுத்து மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் உத்தரவின் பேரில் டாப்சிலிப் பகுதியில் இருந்து நரசிம்மன் மற்றும் அரிசி ராஜா ஆகிய இரண்டு கும்கி யானைகள் வனத்துறை வாகனத்தின் மூலம் தொண்டாமுத்தூருக்கு கொண்டு வரப்பட்டன.
இது தொடர்பாக பேசிய வனத்துறையினர், காட்டு யானைகளை விரட்ட கொண்டுவரப்பட்ட இந்த கும்கி யானைகள் , அதன் பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் பாதுகாப்பாக டாப் ஸ்லிப் பகுதியில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்படும் என தெரிவித்தனர்.