திருவண்ணாமலை அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் கொதிக்கும் நெய்யில் கைகளை விட்டு வடை எடுத்து அம்மனுக்குப் படையலிடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செ.அகரம் கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள அம்மனை 150 குடும்பத்தினர் வழிபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு குடும்பத்திலும் மூத்த மகனின் மனைவி தாய்மை அடைந்தால் கோயில் திருவிழாவை தள்ளி வைப்பது வழக்கம்.
அதன்படி 10 ஆண்டுகளாகத் தள்ளி வைக்கப்பட்ட முத்தாலம்மன் கோயில் திருவிழா, இந்த ஆண்டு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம், முக்கிய வீதிகள் வழியாகக் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.