நாடு முழுவதும் ஓணம் பண்டிகைகோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் யூடியூபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினார்.
நாய்க்குப் புத்தாடை அணிவித்து வாழை இலையில் உணவு பரிமாறி ஒன்றாகச் சாப்பிட்டார்.
இதேபோல் கேரளாவைச் சேர்ந்த நபர் தனது வளர்ப்பு நாய்க்கு வேட்டி சட்டை அணிவித்து அழகு பார்த்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.