காசாவின் தெற்கே உள்ள அல்-ரிமல் பகுதியில் இருந்த கட்டடமொன்றை இஸ்ரேல் குண்டு வீசி தகர்த்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதல் சம்பவத்தால் கட்டடத்துக்குச் சற்று தொலைவில் இருந்த மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர்.
இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள இஸ்ரேல் ராணுவம், சம்பந்தபட்ட கட்டடம் ஹமாஸ் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், அதன் காரணமாகவே தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.