சமோசா கொண்டு வரவில்லை என்பதற்காகக் கணவனை அடித்து துவைத்த மனைவியின் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் புரான்பூர்ப் பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவர் சமீபத்தில் தனது கணவன் சிவத்திடம் மொறுமொறுப்பான சமோசாவை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
ஆனால் சிவம் மறதியில் வெறும் கையுடன் வந்ததால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சங்கீதா, அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்துத் தனது பெற்றோரை வீட்டிற்கு அழைத்து வந்து பஞ்சாயத்தும் செய்ததாகத் தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் சிவம் மற்றும் அவரது பெற்றோர் மீது சங்கீதாவின் குடும்பத்தினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஒரு சமோசாவுக்குச் சண்டையா என நெட்டிசன்கள் நொந்து கொண்டனர்.