இந்தியா மீதான டிரம்பின் 50 சதவீத வரி குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் என இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார் அதிபர் டிரம்ப்.
இதுதொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்,
வரிவிதிப்பின் பாதகமான விளைவுகள், நிதியாண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் உணரப்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்தார்.
அதிக வரி விதிப்பது எதிர்பார்த்த பலனைத் தராது எனவும் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும் என்பதை அமெரிக்கா உணர்ந்திருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் கூறினார்.
மேலும், 50 சதவீத வரிவிதிப்பு குறுகிய காலமே நீடிக்கும் எனவும் சில மறுசீரமைப்புகள் நடைபெறும் எனவும் அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.