இந்தியாவும், சீனாவும் நெருங்கி வரும் நிலையில், பாகிஸ்தான் உடனான நட்பை சீனா தவிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதி நிலைமையை காரணம் காட்டி, பாகிஸ்தானின் ரயில்வே திட்டத்திற்கு நிதியளிக்கச் சீனா மறுத்துள்ளது.
சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தின் ஒரு பகுதியாகக் கராச்சி -ரோஹ்ரி பிரிவு இடையே வழித்தடம் அமைக்கப் பாகிஸ்தான் முடிவு செய்திருந்தது.
இதற்குச் சீனாவிடம் நிதியை கேட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் மோசமான நிதி நிலைமை, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு திட்டத்தில் இருந்து சீனா வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
தற்போது இந்த ரயில்வே திட்டத்திற்கு, 2 பில்லியன் டாலர் நிதியளிக்கக் கோரி ஆசிய மேம்பாட்டு வங்கியைப் பாகிஸ்தான் நாடியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.