திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரதோஷத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆவணி மாத வளர்பிறைப் பிரதோஷத்தையொட்டி, பெரிய நந்தி பகவானுக்குப் பஞ்ச முக தீபாராதனை நடைபெற்றது.
அப்போது பெரிய நந்திக்கு மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா எனப்பக்தி சாமி தரிசனம் செய்தனர்.