நேஷன்ஸ் கோப்பை கால்பந்து தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
மத்திய ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டி தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் 2 ஆட்டங்களில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பெற்றிருந்தது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் உடனான கடைசி போட்டி சமனில் முடிந்தது. இதனால் இந்திய அணி தனது பிரிவில் 2-வது இடத்தை பிடித்தது. அதே பிரிவில் ஈரான் அணி முதலிடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
















