திருநெல்வேலியில் இளைஞரை வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர், தனது நண்பருடன் சேர்ந்து தேநீர் அருந்த கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், ஆனந்தை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2023ம் ஆண்டு சக்தி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டதற்குப் பழிக்குப்பழியாக கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது.
இதனையடுத்துக் கொலையில் தொடர்புடைய இருவரைப் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.