இந்தியா மீதான பார்வையை அமெரிக்க அதிபர் டிரம்ப் தினந்தோறும் மாற்றி வருவதாக நெட்டிசன்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக இருள் சூழ்ந்த சீனாவிடம் இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டோம் எனக் கருத்து தெரிவித்திருந்த டிரம்ப், அதற்கு மறுநாளே இந்தியாவை நாம் இழந்துவிட்டதாக நினைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய அவர், மோடி ஒரு சிறந்த பிரதமர் என்றும், அவருடன் எப்போதும் நண்பனாக இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா தற்போதும் ஒரு சிறந்த உறவை கொண்டிருப்பதாகவும், இந்தியாவை நாம் இழந்துவிட்டதாக நினைக்கவில்லை என்றும் இந்தியா குறித்த பார்வையை டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்று ஒரு கருத்து, இன்று ஒரு கருத்து, நாளை என்ன சொல்லப் போகிறீர்கள் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.