சென்னை கோயம்பேட்டில் பேருந்தில் நகை திருடப்பட்ட விவகாரத்தில், திமுக ஊராட்சி மன்ற தலைவியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கடந்த ஜூலை 14ம் தேதி நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி என்பவர், காஞ்சிபுரத்தில் இருந்து கோயம்பேடுக்குப் பேருந்தில் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்குச் சென்று, தனது பையைத் திறந்து பார்த்துள்ளார்.
அப்போது அதில் வைத்திருந்த நான்கு சவரன் நகையை காணாமல் வரலட்சுமி அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவியான திமுகவைச் சேர்ந்த பாரதி என்பவரே நகையை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவியான பாரதியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.