தென் கொரியாவை சேர்ந்த இரண்டு மலையேற்ற வீரர்களை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள சிகரத்தில் இருந்து, விமான படை வீரர்கள் மீட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 4-ஆம் தேதி மலையேற்ற பயணத்தின்போது, லடாக்கில் உள்ள கொங்மருலா மலை உச்சி பகுதியில் இரண்டு தென் கொரிய பயணிகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிரமப்பட்டனர்.
இதையறிந்த இந்திய விமானப்படையினர் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் 17 ஆயிரம் அடி உயரத்தில் உடல் நலக்குறைவுடன் தவித்திருந்த இரண்டு தென்கொரிய பயணிகளை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.