திண்டுக்கல்லில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கியுள்ள விடுதிக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் உள்ள விடுதி ஒன்றில் தங்கினார்.
இங்கு இவரைச் சந்திக்க வரும் தொண்டர்கள் அனைவரும் தீவிரச் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் விடுதியை சுற்றிலும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிரச் சோதனை செய்யப்பட்டது.