ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னைத் தரமணியில் செய்தியாளர்களிடம் அவர்ப் பேசியதை மினிடாக்ஸ் பகுதியில் பார்க்கலாம்…
டிடிவி தினகரனின் கருத்து குறித்து நான் கருத்து சொல்லத் தகுதியானவள் இல்லை என்றும் எல்லாப் பிரச்னையும் தேர்தலுக்கு முன்பாக நிறைவடைந்து விடும் என்று தமிழிசை சௌந்தரரராஜன் கூறினார்.
பாமகவை சேர்ந்த ம.க.ஸ்டாலின் அவரது அலுவலகத்திற்கு உள்ளேயே குண்டு வைத்து தாக்கப்பட்டுள்ளார் என்றும் ஏர்போர்ட் மூர்த்தி டிஜிபி அலுவலகத்திற்கு வெளியேயே தாக்கப்பட்டுள்ளார் என்றும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமான நிலையில் உள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.
ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் என்றும் 2026 தேர்தலில் நாங்கள் பலம் பொருந்தியவர்களாக இருப்போம் என்று தமிழிசை சௌந்தரரராஜன் குறிப்பிட்டார்.