பிரான்ஸ் – இந்தியா நல்லுறவு குறித்தும், ரஷ்யா – உக்ரைன் போர்நிறுத்தம் குறித்தும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உடன் கலந்துரையாடியதாகவும், பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவு முன்னேற்றம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம் என்றும் உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த இந்தியா – பிரான்ஸ் இடையிலான ராஜதந்திரக் கூட்டணி தொடர்ந்து பாடுபடும் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.