திமுகவினர் எங்கெல்லாம் மேயராக இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஊழல் நடப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பேசிய அவர், திண்டுக்கல் மாநகராட்சியில் 4 கோடி 66 லட்சம் மோசடி நடந்துள்ளதாக தெரிவித்தார்.
நெல்லையில் திமுக கவுன்சிலரே அக்கட்சி மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருகிறார் என்றும், மதுரை மாநகராட்சியில் மட்டும் 200 கோடி கொள்ளை வெட்ட வெளிச்சமாகி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் 6000 டாஸ்மாக் கடைகளில் 2500 பார்களுக்கு மேல் ஒரே கும்பல் ஏலம் எடுத்துள்ளதாகவும், மது பாட்டிலுக்கு ரூ.10 வாங்குகின்ற விதத்தில் வருடத்திற்கு 5400 கோடி மேலிடத்திற்கு செல்கிறது என்றும் கூறினார்.
4 வருடத்தில் ரூ.22,000 கோடி டாஸ்மாக்கில் வசூல் செய்துள்ளது திமுக அரசு தான் என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.