பெரம்பலூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ள தவெக தலைவர் விஜய், அடுத்ததாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக வரும் 13-ம் தேதி முதல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் மற்றும் காமராஜர் வளைவு பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கடிதம் வழங்கினார்.