ஆவணி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், ஆவணி மாத பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் குவிந்துள்ளனர்.
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ள பக்தர்கள் அண்ணாமலையார் கோயில் ராஜ கோபுரம் எதிரே கற்பூரம் ஏற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது மட்டுமின்றி பெரிய தெரு, இரட்டை பிள்ளையார் கோயில் தெருக்கள் வழியாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.