சந்திர கிரகணத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சந்திர கிரகணத்தை ஒட்டி, பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பிற்பகல் 2 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு, நாளை அதிகாலை மீண்டும் திறக்கப்படும். அதைத் தொடர்ந்து, சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று, கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.