சந்திர கிரகணத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலின் நடை, இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான கடைசி சந்திர கிரகணம் இன்று இரவு 9.59 மணிக்கு நடக்கவுள்ளதால், தமிழகத்தில் உள்ள பல கோயில்களின் நடை சாத்தப்படுவதாக கோயில் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, சந்திர கிரகணத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணி முதல் நாளை அதிகாலை 5.30 மணி வரை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு மேல், பக்தர்கள் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.