சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வந்த வருமான வரித்துறை சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை தியாகராய நகர், மேற்கு மாம்பலம், வடபழனி, ஆழ்வார்பேட்டை, எம்ஆர்சி நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த தொழிலதிபர்கள், கெமிக்கல் நிறுவனம் நடத்தி வந்த தனியார் நிறுவன உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகம் என 12க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 4ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர்.
கடந்த 3 நாட்களாக நடந்து வந்த சோதனை நள்ளிரவில் நிறைவடைந்தது. இதில், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களையும், சில மின்னணு சாதனங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.