தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அம்மாநில ஆளுநர் ஜிஷ்ணு தேவை சந்தித்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, பரஸ்பர நலன்கள் சாா்ந்த விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளாா்.