ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பீகார் மாநிலம் ராஜ்கிரில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் சீனாவும் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே அதிரடி காட்டிவந்த இந்திய அணி, 7-க்கு பூஜ்ஜியம் என்ற கோல்கள் கணக்கில் சீனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தொடர்ந்து இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்கொரிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது.